தீயணைப்பு மீட்பு பணி குறித்து தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம்

X
Komarapalayam King 24x7 |24 May 2025 8:24 PM ISTதீயணைப்பு மீட்பு பணி குறித்து தீயணைப்பு துறையினர் சார்பில் குமாரபாளையத்தில் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தீயணைப்பு மீட்பு பணி குறித்து குமாரபாளையம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு, பொதுமக்கள் மத்தியில் தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கமளித்தனர். எதிர்பாராமல் தீ விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கவும், நீர் நிலைகளில் சிக்கிய நபரை மீட்பது குறித்தும், தீ விபத்து நடந்த இடங்களில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது, பேரிடர் மேலாண்மை குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமாரபாளையம் தீயணைப்புத் துறையினர் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் செயல்முறை விளக்கமளித்தனர். தீயணைப்பு துறை அலுவலர் ஜெயச்சந்திரன் கூறியதாவது: ஆறு, ஏரி, குளங்கள், கிணறு ஆகிய நீர் நிலைகளில் ஆபத்தான நிலையில் இருக்கும் நபரை, தீ விபத்து நடந்த இடத்தில் சிக்கிய நபரை செயல்முறை விளக்கமளித்தபடி எளிய வழிகளின் மூலம் காப்பாற்றலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
