கோத்தகிரி அருகே உள்ள இட்டக்கல் கிராமத்தில், பசவ ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கோத்தகிரி அருகே உள்ள இட்டக்கல் கிராமத்தில், பசவ ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
X
கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
கோத்தகிரி அருகே உள்ள இட்டக்கல் கிராமத்தில், பசவ ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில், லிங்காயத்து சமுதாய மக்கள் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் நிலையில், ஆண்டுதோறும், பசவ ஜெயந்தி விழா கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நடப்பாண்டுக்கான விழா, மைசூரு சுத்துார் மடம் ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திரா மகாசுவாமி தலைமையில், காலை, 7:45 மணிக்கு கொடியேற்றதுடன் துவங்கியது. நீலகிரி மாவட்ட வீர சைவ லிங்காயத்து பசவ ஜெயந்தி விழா தலைவர் போஜராஜன் தலைமை வகித்தார். அவரை, கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் கவுரவித்தார். விழாவில், தேர் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை நடராஜ் சுவாமிகள், உறங்காடு சீனி பார்வதி பசுவராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். காவடி கேரே பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ நடராஜ் சுவாமிகள்,பேபி மடம் டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ திரிநேத்தர மஹாத்தா சிவயோகி பீடாதிபதிகள் முன்னிலையில்,கர்நாடக மாநிலத்தின் மாண்புமிகு. முன்னாள் முதலமைச்சர் திருமிகு. ஜெகதீஸ் ஷட்டர் -M.P. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர் மேலும் பல்வேறு மாநில நிர்வாகிகள், நாக்குபெட்ட தலைவர் திரு.முருகன் உள்பட படுக சமுதாய தலைவர்கள், படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர் திரு.மஞ்சை.வி.மோகன் பாஜக மாவட்ட தலைவர் திரு.டாக்டர். தருமன், மாவட்ட பொதுச்செயலாளர் திரு.குமார் ஆகியோர் உள்பட. ஆயிரகணக்கான ஓம் ஸ்ரீ குரு பசவ லிங்காயா ஸ்வாமிகளின் பக்தர்கள் கலந்துக்கொண்டு பசவ ஜெயந்தி விழாவை கோலகலமாக கொண்டாடி சிறப்பித்தனர்... விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட வீரசைவ லிங்காய்து பசவ ஜெயந்தி விழா குழுவின் தலைவர் திரு.HRM.போஜராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவை இந்திய தேயிலை வாரிய துணைத்தலைவர், கோல் இந்திய நிறுவன இயக்குனருமான திரு.HRM.B.ராஜேஷ் அவர்கள் தொகுத்து வழங்கி ,ஒருங்கிணைத்து, சிறப்பாக செய்திருந்தார். விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது . நிர்வாகிகள் போஜன் சந்தய்யன், சுப்ரமணி, லிங்கராஜ் மற்றும் பசவேஸ்வரா மடம் அறங்காவலர்கள், விழா குழுவினர், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story