காவல் நிலையத்தை முற்றுகையிட இருந்த நிலையில் கைது

X
அகில இந்திய இந்து மகா சபா சார்பில் கிறிஸ்து வன்னியர்களை எம் பி சி பட்டியலில் சேர்க்கக்கூடாது எனக் கூறி மேட்டுப்பட்டி பகுதியில் நடக்க இருக்கும் பொது கூட்டத்தை கண்டிக்கும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து மக்கள் கட்சி மாநில தொண்டர் அணி தலைவர் மோகன் அவர்களை அதிகாலையில் வீட்டில் வைத்து நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இதை கண்டிக்கும் விதமாக பழனி பைபாஸ் பகுதியில் இருந்து நகர் வடக்கு காவல் நிலையம் வரை பேரணியாக சென்று அகில இந்திய இந்து மகா சபாவை சேர்ந்தவர்கள் முற்றுகையிட பழனி பைபாஸ் பகுதியில் ஒன்று திரண்டனர். இதில் தேசிய தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீஜி, தேசிய துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி, தேசிய துணை தலைவர் நாகலட்சுமி, இளைஞர் அணி பொதுச் செயலாளர் இளவரசன், மாநில மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, தென்மண்டல தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஒன்று திரண்டனர். பழனி பைபாஸ் பகுதியில் ஒன்று திரண்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
Next Story

