மரங்களால் பாலங்கள் உடையும் நிலை

X
சென்னை மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் மேம்பாலத்தில் வளரும் மரங்களால் பாலங்கள் உடையும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள எடப்பாளையம் விஜயநல்லூர் சோழவரம் சுங்கச்சாவடி வரை மேம்பாலங்களில் வலது மற்றும் இடது புறங்களில் அதிக அளவு மரங்கள் வளர்ந்துள்ளன மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையின் மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் சென்று வந்தாலும், கீழே உள்ள அனைத்து முக்கிய பகுதிகளையும் இணைக்கும் சர்வீஸ் சாலைகளில் , பராமரிப்பு இல்லாததால் ஆலமரம் அரச மரங்கள் அதிக அளவு வளர்ந்து மேம்பாலத்தின் ஸ் திரத்தன்மையை பாதிக்கும் வகையில் காணப்படுகிறது தொடர்ந்து ஓரிரு வருடங்களில் மரங்கள் பெரிதாக வளரும் பட்சத்தில் ஒட்டுமொத்த மேம்பாலமும் உருக்குலையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது
Next Story

