தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதயநிதி ஸ்டாலின் உதவி

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாதரங்கோட்டை தெற்கு ஊராட்சி, அனந்த கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - அன்பரசி தம்பதியினர். கூலித்தொழிலாளிகளான இவர்களது வீடு கடந்த பிப்ரவரி மாதம் தீப்பற்றி முற்றிலுமாக சேதமடைந்தது. இவர்கள் தங்களுக்கு உதவி கேட்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில், துணை முதலமைச்சர் ரூபாய் 25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும், அவர்களுக்கு 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் அரசு சார்பில் வீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்நிலையில், சனிக்கிழமை அன்று தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.பழனிவேல், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார், திருவோணம் தெற்கு ஒன்றியச் செயலாளர் சோம.கண்ணப்பன், இளைஞர் அணி தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஆதி.ராஜேஷ், துணை அமைப்பாளர் டாக்டர் ஆர்.சந்திரசேகர், திருவோணம் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கட்சியினர் நேரில் சென்று ரமேஷ் - அன்பரசி தம்பதியினரிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய காசோலையை அளித்தனர். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆறுதல் கூறி, தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூபாய் 10 ஆயிரத்தை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

