ஆம்னி வேன் சென்டர் மீடியனில் மோதி விபத்து

X
னதிண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கஸ்பா அய்யலூரை சேர்ந்தவர் சந்திரகுமார்(வயது 35). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் தனது ஆம்னி வேனில் மகள் அபிநயா(11) என்பவருடன் திண்டுக்கல் சென்று மளிகை கடைக்கு பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் அய்யலூர் திரும்பினார். திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேல்வார்கோட்டை பிரிவு அருகே வேன் சென்றபோது, இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையைக் கடக்க குறுக்கே புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி, சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியன் மீது பயங்கரமாக மோதி நின்றது. இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆம்னி வேனில் பயணம் செய்த சந்திரகுமார் மற்றும் அவரது மகள் அபிநயா ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று இடிப்பாடுகளுக்குள் சிக்கிய இருவரையும் போராடி மீட்டனர். வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முத்தனாங்கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்த மூன்று பேரையும் வீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

