போச்சம்பள்ளி அருகே வேன் மோதி சர்வேயர் உயிரிழப்பு.

போச்சம்பள்ளி அருகே வேன் மோதி சர்வேயர் உயிரிழப்பு.
X
போச்சம்பள்ளி அருகே வேன் மோதி சர்வேயர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அடுத்த அனுமன்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (32). நில அளவையாளர். இவர் நேற்று முன்தினம் இரவு போச்சம்பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது பனங்காட்டூர் என்ற இடத்தில் தர்மபுரி நோக்கி சென்ற வேன் பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த புகாரின்பேரில் பாரூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story