கோவை: ரெட் அலர்ட் - அமைச்சர் முத்துசாமி ஆய்வு !

கோவை: ரெட் அலர்ட் - அமைச்சர் முத்துசாமி ஆய்வு !
X
கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள கூட்செட் சாலையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.
கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள கூட்செட் சாலையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறும் போது, நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டம் போன்ற இடங்களிலே, மிகக் கடுமையான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அந்த வானிலை ஆய்வு மையம் அறிக்கையின்படி, உடனடியாக முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு கூறியதன் அடிப்படையில், எல்லா ஏற்பாடுகளையும் மிக சிறப்பாக கோவை மாவட்டத்தில் செய்திருக்கிறார்கள். குறிப்பாக எந்தெந்த இடங்களில், பிரச்சனைகள் இருக்கும் என்பதை ஏற்கனவே உள்ள அனுபவத்தின் அடிப்படையில் அந்த இடங்களில் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தண்ணீர் தேங்குவது, தவிர்க்கப்படும் வகையில் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் மாவட்டம் முழுவதும், எங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். இன்று நான் இங்கு வந்து பார்க்கும் பொழுது மாவட்ட முழுவதும், மேட்டுப்பாளையம் தொடங்கி வால்பாறை வரை அத்தனை இடங்களிலும் மிக அருமையான முன்னேற்பாடுகளை செய்துள்ளனர் என்று கூறினார்.
Next Story