திண்டிவனம் அருகே கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

X
திண்டிவனம் வட்டம், செண்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தவசுபாலன், தொழிலாளி. இவரது மகள் அஷ்மிதா (18). இவா், திண்டிவனத்தை அடுத்துள்ள கோனேரிக்குப்பத்தில் இயங்கி வரும் தனியாா் கல்லூரியில் இளம் அறிவியல் முதலாமாண்டு பயின்று வந்தாா்.அஷ்மிதா பல்கலைக்கழகத் தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியடைந்தாராம். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த அவா், கடந்த 16-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.தையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஷ்மிதா புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

