வி.அகரத்தில் களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

X
விழுப்புரம் அருகே வி.அகரம் ஊராட்சி, புருஷானூர் கிராம விவசாயிகள், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்;புருஷானுார் கிராமத்தில் உலர்களம் இல்லாததால், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், கேழ்வரகு, உளுந்து பயிர்களில் இருந்து, தானியங்களை பிரித்தெடுக்க வழியின்றி சிரமப்பட்டு, சாலைகளை பயன்படுத்தி வருகிறோம்.நீண்டகால கோரிக்கை ஏற்று, தற்போது உலர்களம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை, சில தனி நபர்கள் வீடு கட்டிக் கொள்ள ஒதுக்கீடு செய்துள்ளனர். அதனை நீக்கி, தானியங்கள் பிரித்து, உலர வைக்க உலர்களம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஏற்கனவே உள்ள பழைய உலர்களம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றிவிட்டு, புதிய உலர்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

