காவேரிப்பாக்கம்:போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஊராட்சி செயலாளர்

X
காவேரிப்பாக்கம் ஒன்றியம் களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 56). இவர் கடந்த 1999-ம் ஆண்டு களத்தூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம் அவர் சங்கரன்பாடி ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் இவர் கடந்த 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போது 10-ம் சான்றிதழ் சமர்ப்பித்துள்ளார். 26 ஆண்டுகள் பணியாற்றியதை தொடர்ந்து இளநிலை உதவியாளர் பதவி உயர் விற்கு அவருடைய கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. அப்போது மகேந்திரன் போலி கல்விச்சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கடந்த 8-ந் தேதி பணி நீக்கம் செய்து, காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் நேற்று அவளூர் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் அவளூர் போலீசார் மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

