ஊரடங்கும் மழையிலும் ஓயாத உழைப்பு

– தொழிலாளர்களின் நிலை
ஊரடங்கும் மழையிலும் ஓயாத உழைப்பு – தொழிலாளர்களின் நிலை என்ன சொல்கிறது மழைக்காலம் என்பது பலருக்குப் புத்துணர்ச்சியாக இருக்கலாம். ஆனால், தினசரி வேலைக்கு சென்று கூலி சம்பாதிக்கின்ற தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளுக்கு இது இன்னல்களை வாரி வழங்கும் பருவமாகவே உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைமறித் தூறல் முதல் வட்டமாகக் கொட்டும் மழை வரையிலான மாறுபாடுகளைக் காண முடிந்தது. இதன் காரணமாக பல இடங்களில் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில் இருந்தன. இந்த சூழ்நிலையில் கூட, தங்கள் வேலைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தொழிலாளர்கள் பணியாற்றுவது உண்மையான ஈகையின் உதாரணமாக இருக்கிறது. கட்டுமானத் தளங்களில் ஊரே நனைய – வேலை நின்றதில்லை! கட்டுமானத் தளங்களில் கூலி தொழிலாளர்கள், பெய்யும் மழையை பொருட்படுத்தாமல், சிமெண்ட் பாக்கெட்டுகள் தூக்கியும், சுவர் கட்டும் பணிகளையும் தொடர்ந்து செய்தனர். தொழிலாளியின் வலி: “மழை நின்னா வேலை நின்னு போகும். அப்படி ஆனா சாப்பாடு எங்கிருந்து வரும்? எங்க பசங்களுக்குத் தான் வேலை செய்றோம்,” எனச் சுட்டிக்காட்டுகிறார் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருக்கும் தூய்மைபணியாளர் தனசேகர். மழையிலும் தவிக்காமல் உழைக்கும் இந்த மக்களே நகரத்தின் அடித்தளத்தைக் கட்டியெழுப்பும் உண்மையான நாயகர்கள். இவர்களுக்கான உரிமைகளும் பாதுகாப்பும் நாம் உரிய கவனத்துடன் பார்க்க வேண்டிய நேரம் இது.
Next Story