கோவிலில் சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்

X
மதுரை மாவட்டம் திருமங்கலம் குதிரச்சாரி குளம் கிராமத்தில் ஏழு பேர் சாமி கோவில் உள்ளது ecoவில் 10க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் உள்ளது இக்கோவிலில் ஆண்டு வரும் மாசி களரி அன்று கோவிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.மற்ற நாட்களில் கோவில் பூட்டப்பட்டு இருக்கும். இந்த கோவிலை சுத்தம் செய்வதற்காக தினந்தோறும் ஒரு பெண்மணி கோவிலுக்கு வந்து சுத்தம் செய்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விடுவார். வழக்கம்போல் நேற்று (மே.24) காலை கோவிலை சுத்தம் செய்வதற்காக வந்த பெண்மணி சாமி சிலைகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவத்தார். இக் கோவிலில் இருந்த அம்மன் சுவாமி ஸ்ரீதேவி பூதேவி மாயாண்டி பேச்சு உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட சுவாமிகளின் கற்சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சுவாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.சுவாமி சிலைகள் உடைந்ததால் அப்பகுதி மக்கள் கோவில் முன் கூடியதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
Next Story

