கோவை: அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் - வேலுமணி பங்கேற்பு!

கோவை: அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் - வேலுமணி பங்கேற்பு!
X
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நேற்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, மாநகர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நேற்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, மாநகர் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, கோவை மாநகராட்சி வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அடிப்படை திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார். திமுக அரசின் மீது குற்றச்சாட்டுகள் திமுக அரசு தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்றும், அனைத்துத் தரப்பு மக்களும் சிரமத்தில் இருப்பதாகவும் வேலுமணி குற்றம் சாட்டினார். கைத்தறி மற்றும் விசைத்தறி போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சரானால் மட்டுமே இந்த நிலை மாறும் என பொதுமக்கள் கருதுவதாகவும், மக்கள் திமுகவை புறக்கணிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
Next Story