பேரளம் - காரைக்கால் புதிய அகல ரயில் பாதை ஆய்வு

X
திருவாரூர் மாவட்டம், பேரளத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் இன்று ஆய்வு மேற்கொண்டார். பேரளம் -காரைக்கால் இடையே ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட அகலப்பாதை யில் ரெயில்வே பாது காப்பு ஆணையர் இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டார். காரைக்கால் - பேரளம் இடையே 23 கிலோமீட்டர் தூரத்திற்கு அகல ரெயில் பாதை பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்பணி முடிவடையும் தருவாயில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. அந்த சோதனை ஓட்டத் தின் போது கண்டறியப்பட்ட குறைகளை, பெங்களூரு தெற்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி, தெற்கு ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) ஸ்ரீ சுஷில் குமார் மவுர்யா, திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று மற்றும் இன்றும் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று பேரளம் துவங்கி திருநள்ளாறு வரையிலும் ஆய்வு செய்த அவர்கள் இன்று திருநள்ளாறு துவங்கி காரைக்கால் வரை டிராலியில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் காரைக்கால் -திருநள்ளாரில் இருந்து பேரளம் ரயில் நிலையத்திற்கு அதிவேக விரைவு ரயிலில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இப்பாதையில் விரைவில் புதிய ரயில்கள் இயக்கப்படும் என்பதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Next Story

