வடுகபட்டியில் புதிய சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை

X
மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய சுகாதார வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் மூலனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், அரசு மருத் துவர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

