சேலத்தில் வெள்ளைநிற கோதுமை நாகபாம்பு பிடிபட்டது

சேலத்தில் வெள்ளைநிற கோதுமை நாகபாம்பு பிடிபட்டது
X
தீயணைப்பு துறையினர் பிடித்தனர்
சேலம் சீலநாயக்கன்பட்டி சூரியகவுண்டர் காடு பகுதியில் ஒரு வீட்டின் அருகில் இருந்த கற்குவியலில் நேற்று மாலை பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உதவி தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையில் வீரர்கள் அங்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த பாம்பை வீரர்கள் லாவகமாக பிடித்தனர். இந்த பாம்பு வெள்ளை நிறத்தில் இருந்தது. 5 அடி நீளமுள்ள கொடி விஷபாம்பு என்பது தெரிய வந்தது. அது நாக பாம்பின் இன்னொரு வகை என்றும் கூறப்படுகிறது. அந்த பாம்பு வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு அடர்ந்த காட்டுக்குள் விடப்பட்டது.
Next Story