பணியின் போது மரணம் அடைந்த இரண்டு பேருக்கு பணி ஆணை

X
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 2 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான வரவேற்பாளர் (Receptionist) பணியாணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த பெண் காவலர் சந்திரா என்பவரின் கணவர் ரவிசெல்வம் என்பவருக்கும், சார்பு ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் என்பவரது மனைவி சுப்புலட்சுமி என்பவருக்கும் கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி காவல்துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த மேற்படி பெண் காவலரின் கணவருக்கும், சார்பு ஆய்வாளரின் மனைவிக்கும் வரவேற்பாளர் (Recepionist) பதவிக்கு தமிழக அரசு பணி நியமனம் செய்துள்ளது. இந்த பணி நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் ரவிசெல்வம் மற்றும் சுப்புலட்சுமி ஆகிய இருவருக்கும் வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்.
Next Story

