மதுரையில் டிரான்ஸ்பாரம் இருந்து விழுந்த மின் ஊழியர் பலி.

மதுரையில் டிரான்ஸ்பாரம் இருந்து விழுந்த மின் ஊழியர் பலி.
X
மதுரை மதுரை கோமதிபுரத்தில் மின்சார டிரான்ஸ்பாரத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியர் உயிரிழந்தார்.
மதுரை கோமதிபுரம் மல்லிகை மேற்குதெருவில் மின்சார டிரான்ஸ்பார்மரில் இன்று (மே 25) காலை கொந்தகையை சேர்ந்த மின் வாரிய தற்காலிக ஊழியர் ஜெயக்குமார் பணிபுரிந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து உயிரிழந்தார். இவருக்கு வாசுகி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 13 ஆண்டுகளாக மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக ஜெயக்குமார் பணிபுரிந்த வந்த நிலையில் இன்று (மே 25) காலை பணியின்போது தவறி விழுந்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story