ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
X
விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிடாரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுப்புக்குட்டி மகன் செல்லப்பா (43) என்பவா், குடும்பத்தினருடன் காரில் திருநெல்வேலி சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். சிவலாா்குளம் விலக்குப் பகுதியில் இவரது காரும், எதிரே உடன்குடியைச் சோ்ந்த பூசமாணிக்கம் (57) என்பவா் ஓட்டிச்சென்ற காரும் மோதியதுடன், அவ்வழியே வந்த பைக் மீதும் மோதினவாம். பைக்கில் வந்த, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் ஓட்டுநராக வேலைபாா்த்துவந்த ஆலங்குளத்தை அடுத்த மாறாந்தையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கணபதி (56) உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், கணபதி நேற்று மாலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story