பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு

X
நாகை மாவட்டம் திருக்குவளை துணை மின் நிலையம் அருகில் ஒரு வீட்டில் புளிய மரத்தில், கூடு கட்டி இருந்த விஷ வண்டுகளால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலைஞாயிறு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் முன்னணி தீயணைப்பர் ஆ.சண்முகவேல் தலைமையில் விஷ வண்டு அழிக்கப்பட்டது. அப்போது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுதா அருணகிரி உடனிருந்தார். இதேபோல, கொளப்பாடு மற்றும் நெல்லியடி மதகு பகுதிகளில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் அழிக்கப்பட்டது. அப்போது, கொளப்பாடு முன்னாள் ஊராட்சி துணை தலைவர் பாலாஜி உடனிருந்தார்.
Next Story

