ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி ஜெ.குருவின் நினைவு நாளில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பாமகவினர் மாலை அணிவித்து மரியாதை

ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி ஜெ.குருவின் நினைவு நாளில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பாமகவினர் மாலை அணிவித்து மரியாதை
X
ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி ஜெ.குருவின் நினைவு நாளில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பாமகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூர், மே.25- ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி ஜெ.குருவின் நினைவு நாளில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பாமகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்த நிகழ்வு காண்போரை வியப்படையச் செய்துள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ. குருவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரியலூர் மாவட்டம் முழுவதும் பாமகவினர் தரப்பில் காடுவெட்டி ஜெ.குருவின் திருவுருவப்படத்திற்கு பல்வேறு இடங்களில் பாமகவினர் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் தா. பழுர் கடைவீதியில் காடுவெட்டி ஜெ.குருவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி தலைமையில் பாமகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, காடுவெட்டி குருவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி அடுத்த கட்ட நிகழ்வுக்கு தயாராகி நின்று கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என பாமக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் , அங்கு சென்ற பாமகவினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். பொதுவாக அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் மட்டுமே பாமகவினர் மரியாதை செய்வார்கள். ஆனால் காடுவெட்டி குருவின் நினைவு நாளில் அம்பேத்கர் சிலைக்கு பாமகவினர் மரியாதை செய்தது காண்போரை வியக்கச் செய்தது. இந்தசிலையானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விசிகவிற்கும், பாமகவிற்கும் கருத்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது காடுவெட்டி குருவின் நினைவு நாளில், அம்பேத்கர் சிலைக்கும் சேர்த்து பாமகவினர் மாலை அணிவித்த நிகழ்ச்சி பேசும் பொருளாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story