சுவரில் ஏறிய தொழிலாளி விழுந்து சாவு

சுவரில் ஏறிய தொழிலாளி விழுந்து சாவு
X
மண்டைக்காடு
குமரி மாவட்டம்  மண்டைக்காடு அருகே உள்ள கருமன் கூடல் பகுதியை சேர்ந்தவர் முருகன் (40) தொழிலாளி. இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஒரு மகனும் மகளும் உள்ளனர். முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இவர் தினமும் வேலை சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது மது குடித்து விட்டு, கையில் ஒரு மது பாட்டிலுடன் வருவதும், அந்த பாட்டிலை வீட்டின் சமையலறையில் சுவற்றின் மேல் பொருட்களை வைத்து பாதுகாக்கும் சிலாப்பில் மறைத்து வைத்து, போதை சற்று இறங்கியதும் யாருக்கும் தெரியாமல் மீண்டும் எடுத்து குடிப்பதும் வழக்கம்.       இந்த நிலையில் சம்பவ தினம் வழக்கம்போல் வேலை முடிந்ததும் முருகன் மது பாட்டில் வாங்கி வந்து சமையல் அறை சிலாபில் மறைத்து வைத்திருந்தார். இது கழித்து போதை தெளிந்தவுடன் மறைத்து வைத்திருந்த மதுவை எடுத்து குடிக்க முடிவு செய்து சிலாபில் மேல் ஏறியுள்ளார்.      அப்போது திடீரென நிலை தடுமாறு கீழே விழுந்ததில் அவர்  பின் தலையில் பலத்த காயம்  ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிட்சை பலன் இன்றி நேற்று முருகன் உயிரிழந்தார். இது குறித்து கவிதா அளித்த புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story