கோவை: கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு விருது !

பொறியியல், தொழில் மேலாண்மை, கலை மற்றும் அறிவியல் துறைகளில் சிறந்த பங்களிப்பைச் செய்த, மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர் கேபிஆர் கல்வி நிறுவனங்கள், பொறியியல், தொழில் மேலாண்மை, கலை மற்றும் அறிவியல் துறைகளில் சிறந்த பங்களிப்பைச் செய்த, மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அங்கீகரிக்கும் வகையில், கேபிஆர் லெகஸி விருதுகள் 2025 விழாவை நேற்று நடத்தியது. இது கேபிஆர் குழுமத்திற்கு ஒரு புதிய மைல்கல்லாக அமைந்தது. கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே.பி. ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (AICTE) தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரியும், அனுவதினி AI-ன் தலைமை செயல் அதிகாரியுமான முனைவர் புத்த சந்திரசேகர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். தேசிய வளர்ச்சிக்குக் கல்வியின் முக்கியத்துவம்: தலைமையுரையாற்றிய கே.பி. ராமசாமி, கல்வித் திறனையும் தேசிய வளர்ச்சியில் அதன் பங்களிப்பையும் அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், கேபிஆர் கல்வி நிறுவனங்கள் எப்போதும் மாற்றத்தை உருவாக்கும் ஆராய்ச்சிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார்.
Next Story