ராணுவ வீரர்களுக்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கும் பேரணி
சிந்தூர் ராணுவ வீரர்களுக்கும் பாரத பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அத்திப்பட்டு பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமியர்கள் பாரத மாதா வேடம் அணிந்து மூவர்ண தேசிய கொடி ஏந்தி பேரணி சென்றனர் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சியில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் சிந்தூர் ராணுவ தாக்குதலின் வெற்றி கொண்டாட்டத்திற்கும் ராணுவ வீரர்களுக்கும் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாரத மாதா வேடமணிந்து பாரத் மாதா கி ஜே பிரதமர் மோடி வாழ்க கோசங்களை எழுப்பியவாறு மூவர்ண தேசிய கொடியை ஏந்தி மேள தாளங்கள் முழங்க கிழக்கு மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் சிவக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் முன்னாள் தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையர் வெங்கடேசன். மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story





