ஓசூர் அருகே ஆம்னி பேருந்து டூவீலர் மீது மோதி வாலிபர் பலி.

ஓசூர்  அருகே ஆம்னி பேருந்து டூவீலர் மீது மோதி வாலிபர் பலி.
X
ஓசூர் அருகே ஆம்னி பேருந்து டூவீலர் மீது மோதி வாலிபர் பலி.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி அருகே உள்ள தோடுதேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (19) இவரது நண்பர் அரவிந்த் குமார் (23) ஆகிய 2 பேரும் டூவீலரில் மூக்கண்டப்பள்ளி தீயணைப்பு நிலையம் அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற ஆம்னி பேருந்து டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அரவிந்த் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் அரவிந்த்குமார் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story