காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் ராணுவ வீரர்கள் சால்வை அணிவித்து பாராட்டு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை உத்தரவுப்படி தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு INTUC மாநில பொதுச் செயலாளர்,காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தலைமையில் முன்னாள் ராணுவ வீரர் ராமசாமி கௌரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அகில இந்திய ஒர்க்கஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன் AICWC மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஜெயஜோதி ,மீனவர் அணி மிக்கேல் குரூஸ், Sc/St முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம் , AICWC மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி, AICWC மகிளா காங்கிரஸ் வசந்தி, மாநில பேச்சாளர் பார்த்திபன்,வர்த்தக பிரிவு நேரு, இளைஞர் காங்கிரஸ் நம்பி சங்கர், கன்னிச்சாமி பாண்டியன், சேக்ஸ்பியர், பாலகிருஷ்ணன்,எபனேசர்,சுரேஷ்குமார், பிரைன்நாத், சாந்தகுமார் ஏசுதாஸ், சேவியர்மிஷ்யர்,ஜோக்கின், ஜெயக்குமார், INTUC சார்ந்த முத்து, ரமேஷ்,சாரதி, கிரிதர் ,பாலன் மற்றும் ஏராளமான தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டனர்.
Next Story




