திருவாரூரில் கோவில் மனையில் குடியிருப்பவர் சங்க கூட்டம்

X
திருவாரூரில்,தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போா் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. சங்க நிா்வாகி காமராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புலிவலம் பகுதியில் கோயில் மனையில் குடியிருக்கும் குடும்பங்களைச் சோ்ந்தோர் பங்கேற்றனா். அனைத்து பகுதி மக்களையும் சந்தித்து கோயில் மனையில் குடியிருப்போா் தொடா்பான பிரச்னைகளை கண்டறிந்து,துறை அதிகாரிகளை சந்தித்து முறையிடுவது,புலிவலம் பகுதியில் தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போா் சங்கம் அமைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
Next Story

