ஜெ.குரு நினைவு தினம் அனுசரிப்பு

வன்னியர் சங்கத்தின் மாநில நிர்வாகியாக பணியாற்றிய ஜெ குரு அவர்கள் ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
வன்னியர் சங்கத்தின் மாநில நிர்வாகியாக பணியாற்றி, மறைந்த ஜெ.குரு அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் ஜெ.குரு அவர்களின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்விற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் க.உமா சங்கர் தலைமை தாங்கினார் .மேலும் மாவட்ட தலைவர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜெ.குரு அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் இந்த நிகழ்வில் பழனியப்பன், கணேசன், கராத்தே சேகர் , அரிமா ராஜேந்திரன், சின்னதுரை, வெங்கடேஷ் ,காடச்சநல்லூர் கார்த்தி, மூர்த்தி, ஏ.பி.பழனிச்சாமி, ஆலாம்பாளையம் முருகன், மெக்கானிக் ராஜா ,மூர்த்தி உள்ளிட்ட வன்னியர் சங்க நிர்வாகிகளும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். நிறைவாக நகர செயலாளர் ராஜா என்கின்ற ராஜசேகர் நன்றி உரையாற்றினார்.
Next Story