செல்லாண்டி பாளையத்தில் சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது.

செல்லாண்டி பாளையத்தில் சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது.
செல்லாண்டி பாளையத்தில் சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது. பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து காவல் பெண் காவல் உதவி ஆய்வாளர் சுபாஷினிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மே 24ஆம் தேதி மதியம் 12:00 மணி அளவில் செல்லாண்டிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள முள்காட்டில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது. இந்த சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட தாந்தோணி மலை சுடுகாடு தெருவை சேர்ந்த ரங்கசாமி வயது 67 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 12 குவாட்டர் மது பாட்டில் மற்றும் நான்கு பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் , ரங்கசாமி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story