மரக்கன்று நடும் விழா

X
Komarapalayam King 24x7 |25 May 2025 8:22 PM ISTகுமாரபாளையம் அருகே மரக்கன்று நடும் விழா நடந்தது.
குமாரபாளையம் அருகே அப்துல்கலாம் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தளிர்விடும் பாரதம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடந்தது. அப்துல்கலாம் ஸ்போர்ட்ஸ் தலைவர் ஞானேஸ்வரன் தலைமை வகித்தார். தளிர்விடும் பாரதம் தலைவர் சீனிவாசன் பங்கேற்று மரக்கன்றுகளை வழங்கினார். தளிர்விடும் பாரதம் செயலாளர் பிரபு பேசுகையில் ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டு, அதற்கு அவர்களின் பெயர்களை சூட்டி, தினமும் தண்ணீர் ஊற்றி தமது வீட்டின் ஒருவரை போல கருதி மரக்கன்றுகளை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும், இளைஞர்கள், இயற்கை சார்ந்த திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும், அதற்காக பல புத்தகங்களை படித்து தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கதிர்வேல், வெங்கடேஷ், பார்த்தசாரதி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
