கடனால் மகளுடன் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்

கடனால் மகளுடன் தந்தை ரயில் முன் பாய்ந்து  தற்கொலை செய்து கொண்டார்
X
திருவள்ளூர் அருகே 6 வயது மகளுடன் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடனானதால் தற்கொலை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் அருகே 6 வயது மகளுடன் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடனானதால் தற்கொலை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (38). இவரது மனைவி வாணி. இவர்களுக்கு 6 வயது மகள் ஜஷ்வந்திகா.லோகநாதன் திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள கட்டுமான இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் தமது மகளுடன் நேற்று இரவு புட்லூர் ரயில் நிலையம் அருகே சென்னையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற வாராந்திர சிறப்பு விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதில் ஆன்லைன் டிரேடிங் மூலம் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும், அதில் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும், மேலும் சிலரிடமும் கடன் வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று தமது 6 வயது மகள் ஜஸ்வந்திகாவுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இரவு 7 மணி ஆகியும் வீட்டிற்கு வராததால் லோகநாதனின் மனைவி வாணி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் குழந்தையுடன் சென்ற கணவர் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.இந்த நிலையில் தான் புட்லூர் ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து 6 வயது மகளுடன் லோகநாதன் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட கடன் காரணமாக மகளுடன் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story