அரசு நூலகத்தில் வாசகர் வட்டத்தின் சார்பாக கலந்துரையாடல்

X
Komarapalayam King 24x7 |25 May 2025 8:25 PM ISTகுமாரபாளையம் அரசு நூலகத்தில் வாசகர் வட்டத்தின் சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது,
குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக, நான் வாசித்த நூல், என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம், குமாரபாளையம் அரசு நூலகத்தில், வாசகர் வட்டத்தின் தலைவர் விடியல் பிரகாஷ் தலைமையில் நடந்தது. ஜமுனா வரவேற்றார். சிற்பி சண்முகசுந்தரம் வழி நடத்தினார். ஆசிரியர் பங்கயம், எழுத்தாளர் கேசவமூர்த்தி ராஜகோபாலன், பஞ்சாலை சண்முகம், பன்னீர்செல்வம், கதிரவன், விஜயராகவன்,செளந்தரம், அம்சவேணி,கலந்து கொண்டு தாங்கள் வாசித்த நூல் பற்றி சிறந்த கருத்துக்களை எடுத்துரைத்தார்கள். குமாரபாளையம் இரண்டாம் நிலை நூலகர் மாரியாயி நன்றி கூறினார். மேலும் வாசகர் வட்டத்தைச் சார்ந்த உறுப்பினர் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story
