எடப்பாடி பழனிச்சாமியின் அணுகுமுறையை பார்த்து ஆளுகின்ற திமுக ஆட்டம் கண்டுள்ளது என ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்தி

X
எடப்பாடி பழனிச்சாமியின் அணுகுமுறையை பார்த்து ஆளுகின்ற திமுக ஆட்டம் கண்டுள்ளது என ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு ....வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மின்னலை போல் பாய்வார் எனவும் புகழாரம் ....
எடப்பாடி பழனிச்சாமியின் அணுகுமுறையை பார்த்து ஆளுகின்ற திமுக ஆட்டம் கண்டுள்ளது என ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு ....வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மின்னலை போல் பாய்வார் எனவும் புகழாரம் .... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜேந்திரபாலாஜி, எல்லா கட்சிகளும் வெளி மாநிலத்தில் இருந்து ஆட்களை இறக்கி அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வேலை பார்த்து வருவதாகவும், அதிமுக வில் மட்டுமே ஐடி விங்கில் உள்ளவர்கள் கட்சிக்காரர்கள் பணி செய்வதாகவும் தெரிவித்தார்.எடப்பாடி பழனிச்சாமி கட்சியை நம்புவதாகவும் கட்சி தொண்டர்களை நம்புவதாகவும்புட் கமிட்டியை நம்புவதாகவும் தெரிவித்தார். அதிமுக அழிந்துவிடும், ஒழிந்துவிடும் காணாமல் போய்விடும் எனக் கூறியவர்கள் எல்லாம் இன்று பயந்து போய் உள்ளார்கள். திமுக பயந்து போய் உள்ளது .வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி அமைத்ததை பார்த்தும், அவரது அணுகுமுறையை பார்த்தும் ஆளுகின்ற திமுக ஆட்டம் கண்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மின்னலை போல் பாய்வார் என தெரிவித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவது உறுதி உறுதி என சூளுரைத்தார். .....
Next Story

