கிக் பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்று வந்த மாணவர்களுக்கு பாராட்டு

கிக் பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்று வந்த மாணவர்களுக்கு பாராட்டு
X
கிக் பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்று வந்த மாணவர்களை பாராட்டினர்.
அரியலூர் மே.25- தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி இயல் பல்கலைக்கழகத்தில் உள்ள இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது . இதில் சப் ஜூனியர்.சீனியர். மற்றும் மாஸ்டர் ஆகியோர் பங்கு பெற்றனர். இப் போட்டியில் லைட் காண்டாக்ட், பாயிண்ட் பைட், லோகிக், கிக் லைட், ரிங் பைட், என்று பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இப்போட்டியில் அரியலூர் மாவட்ட அமைச்சூர் கிக் பாக்ஸிங் மாணவர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரங்கநாதன். செயலாளர். சத்யராஜ் தலைமையில். இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ராஜ்கிரண், முகுந்தன், பாரதி பிரியன், சுஜித், கிஷோர்,அமராவதி, ஆதிர சகானா, அக்சயா. எழில் பாத்திமா. ரித்திகா, ரிஷிகா. ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து. அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை தேடி வந்துள்ளனர். மேலும் வெற்றி பெற்றவர்கள் வரும் ஜூலை மாதம் நடைபெறும் அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை. ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். தமிழ் முருகன், அரியலூர் மாவட்ட அமைச்சூர் கிக் பாக்ஸிங் சங்க மாவட்ட தலைவர் ரெங்கநாதன், செயலாளர் சத்யராஜ், ஆண்டிமடம் பகுதி பயிற்சியாளர் பிரித்தியூனன்,ரவிக்குமார், ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை சால்வை அணிவித்து கௌரவித்து பாராட்டினர்.
Next Story