நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை மே இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தல்

நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை மே இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தல்
X
நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை மே இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
அரியலூர், மே 25- அரியலூர் மாவட்டத்தில், மருதையாறு வடிநில கோட்டம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் நிலைகள் தூர்வாரும் பணிகள் அனைத்தும் மே இறுதிக்குள் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, நீர்வளத்துறை அதிகாரிகள் ஞாயிறுக்கிழமை அறிவுறுத்தினர். மாவட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்ற வருகிறது. அதில் 51.20 கி.மீ நீளத்துக்கு ,22 பணிகள், ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இதில் அரியலூர் மருதையாறு வடிநிலகோட்டம் சார்பில் 20 சிறப்பு துôர்வாரும் பணிகள் 43.60 கிமீ நீளத்துக்கு ரூ.2.36 கோடி மதிப்பீட்டிலும், திருச்சி ஆற்று பாதுகாப்பு கோட்டம் சார்பில் 2 தூர்வாரும் பணிகள் 7.60 கிமீ நீளத்துக்கு ரூ 29.80 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெறுகிறது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்துக்கான ஆய்வு அலுவலரும், சென்னை ஆராய்ச்சி மற்றும் கட்டுமான கண்காணிப்பு, வடிவமைப்பு பொறியாளருமான கிருஷ்ணகுமார், மேற்கண்ட பணிகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வு செய்தார். அதன்படி ஞாயிற்றுக்கிழமை அருங்கால் ஓடை, புது உப்போடை , அரசநிலையத்தான் குறிஞ்சான்குளம் ஏரி, உபரி நீர் வாய்க்கால், மதிகெட்டான் ஏரி நீர்வரத்து வாய்க்கால், பொன்னாறு பிரதான வாய்க்கால், வேட்டக்குடி ஏரி, மதகு வாய்க்கால் எண்}2 மற்றும் 3 நடைபெறும் துôர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், இப்பணிகள் அனைத்தும் மே இறுதிக்குள் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது அரியலூர் மருதையாறு வடிநில கோட்ட செயற் பொறியாளர் பாண்டியன், மருதையாறு வடிநில உபகோட்ட உதவி செயற் பொறியாளர் சாந்தி, ஜெயங்கொண்டம் உதவி செயற் பொறியாளர் தமிழரசன், க.புள்ளம்பாடி ஆற்று பாதுகாப்பு உபகோட்ட உதவிசெயற்பொறியாளர் ரேகா உள்ளிட்டோர் உடனிருந்தனர். :
Next Story