ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் இல்ல விழா: அமைச்சர்கள் பங்கேற்பு*

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் இல்ல விழா: அமைச்சர்கள் பங்கேற்பு*
X
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் இல்ல விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்கள், எம் பி , எம்எல்ஏக்கள், தொழிலதிபர்கள்,பல்வேறு அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு விடாச்செல்வி மதுமிதாவை வாழ்த்தினர்
அரியலூர், மே.25- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினரும், தா.பழூர் கிழக்கு ஒன்றிய செயலாளருமான க.சொ.க. கண்ணன்- டாக்டர் மாலதி கண்ணன் இவர்களின் மகள் க.சொ.க.க. மதுமிதாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா ஜெயங்கொண்டம் க.சொ.க. பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கழக முதன்மைச் செயலாளரும் தமிழக நகராட்சி நிர்வாக துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு, அரியலூர் மாவட்ட கழக செயலாளரும், தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கர், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், தமிழக வேளாண் துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், தொழிலாளர் நலன் துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான சி.வெ. கணேசன், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில், டாக்டர் மாலதி கண்ணன், கே.கே.சி.கல்வி குழும தலைவர் செந்தில்குமார், க.சொ.க.க. ஆதித்யா கணேஷ் மற்றும் ராஜமாணிக்கம், கண்ணன் சூசைராஜ்,,வில்லவன்கோதை, துரைமாறன், சங்கர் மற்றும் தொழிலதிபர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாச்செல்வி மதுமிதாவை வாழ்த்தினர்..
Next Story