தஞ்சாவூரில் முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

X
தஞ்சை ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. ஆட்சித் தலைவர் பிரியங்கா தலைமை வகித்தார். முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மொத்தம் 26 மனுக்கள் பெறப்பட்டன. முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 34 பேருக்கு ரூ.8 லட்சத்து ஒரு ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் விண் ணப்பித்து பயிற்சி முடித்த 40 முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்களுக்கு பயிற்சி முடித்ததற்கான சான்றுகள் வழங்கப்பட்டன. முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் சரவணன், கண்காணிப்பாளர் சுகுமாரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

