திம்பம் பகுதியில் வானில் தோன்றிய வானவில்

திம்பம் பகுதியில் வானில் தோன்றிய வானவில்
X
திம்பம் பகுதியில் வானில் தோன்றிய வானவில்
திம்பம் பகுதியில் வானில் தோன்றிய வானவில் ஈரோடு மாவட்டம், தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை நேரங்களில், வழக்கம் போல் வெயில் அடித்தது. பிற்பகலில் அவ்வப்போது தூறல் மழை பெய்தது. இந்நிலையில் திம்பம் மலைப்பகுதியில் மாலை நேரத்தில் மேகங்கள் திரண்டு லேசான தூறல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது வானத்தில் லேசான வண்ணங்களில், மெலிதான வடிவில் வானவில் தோன்றியது. சில நிமிடங்களில் அடர்த்தியான ஏழு வண்ணங்களுடன் பளிச்சென்று வானவில் தெரிந்தது. இந்த அரிய காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் பார்த்து ரசித்தனர். சிலர் தங்களது செல்போன்களில், வானவிலலை படம் பிடித்து தங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பி மகிழ்ந்தனர்.
Next Story