மத்தூர் அருகே மின்னல் தாக்கி பாசு உயிரிழப்பு.

மத்தூர் அருகே மின்னல் தாக்கி பாசு உயிரிழப்பு.
X
மத்தூர் அருகே மின்னல் தாக்கி பாசு உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (35) இவர் தனக்கு சொந்தமான ஜெர்சி இன பசுவை வளர்த்து வருகிறார். நேற்று மாலை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வரும் போது திடீரென பலத்த மின்னல், காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது நடந்து சென்ற பசு மீது மின்னல் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே பசு உயிரிழந்தார். இதைக்கண்டு அம் பிகா கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story