திருவேங்கடத்தில் பாஜக கட்சி சார்பாக பேரணி நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் வைத்து பாகிஸ்தானின் தீவிரவாத செயலுக்கு எதிராக நமது இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் குருவிகுளம் வடக்கு ஒன்றிய பாஜக கட்சியின் குருவிகுளம் வடக்கு ஒன்றிய தலைவர் வீரகுமார் சார்பில் வெற்றிப்பேரணி நடைபெற்றது. இந்த பேரணி பேச்சியம்மன் கோவில் இருந்து புறப்பட்டு திருவேங்கடம் காந்தி மண்டபம் வரை நிறைவு பெற்றது. இந்த இந்த வெற்றி பேரணியில் தென்காசி மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் திலகம் (எ)முப்புடாதி, முன்னாள் மண்டல தலைவர் ராமச்சந்திரன், சிவ சாம்பவா சேவை சங்கத் தலைவர் சிவகுரு, குருவிகளும் தெற்கு மண்டல தலைவர் குட்டி ராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு விவேகானந்தன், மண்டல பொதுச்செயலாளர் விக்னேஸ்வரன், தெற்கு மண்டல பொருளாளர் நடராஜன், மண்டல செயலாளர் குட்டி மாடசாமி, விவசாய அணி ஒன்றிய தலைவர் போலயப்பன் உள்ளிட்ட ஏராளமான பாஜக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

