கோவை: புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு !

போதை இல்லாத தமிழ்நாடு என்ற நோக்கத்தை வலியுறுத்தி கோவையில் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டது.
போதை இல்லாத தமிழ்நாடு என்ற உயரிய நோக்கத்தை வலியுறுத்தியும், உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டும், வாலாங்குளத்தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடையே புகையிலை மற்றும் போதைப்பொருட்களின் தீமைகளை எடுத்துரைக்கும் வண்ணம் வண்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஓவியம், கட்டுரை மற்றும் ஸ்லோகன் போட்டிகள் மூலம் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் மூலம் போதை இல்லாத சமூகத்தை உருவாக்கும் முனைப்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்பட்டது.
Next Story