கோவை: திமுக தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்கிறது-முருகன்

X
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், புதுக்கோட்டை மற்றும் வேங்கைவயல் சம்பவங்கள், தமிழக அரசின் செயல்பாடுகள், மற்றும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்துப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார். புதுக்கோட்டைக்கு திருமாவளவனுடன் சென்று அம்பேத்கர் சிலை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின், வேங்கைவயல் பக்கம் சென்றிருக்கலாம் என எல்.முருகன் குறிப்பிட்டார். அரக்கோணத்தில் பெண்மணிக்கு நடந்த சம்பவத்திற்கு குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அண்மைய டெல்லி பயணம் அரசியலுக்காகவே என்று மக்கள் கருதுவதாக எல்.முருகன் விமர்சித்தார். இதற்கு முன்பு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் என்றும், ஆட்சி முடியும் தருவாயில்தான் முதல்வர் டெல்லி சென்றுள்ளதாகவும் அவர் சாடினார்.
Next Story

