கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு

கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு
X
ஒதுக்கீடு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களை சார்ந்தோருக்கு கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரர்களை சார்ந்தோருக்கு மருத்துவம், பொறியியல், டி.பார்ம்., பி.பார்ம்., பாலிடெக்னிக்கில் பட்டயப்படிப்புகள், பி.எஸ்சி., (நர்சிங் மற்றும் விவசாயம்), பி.எட்., இந்திய மருத்துவம், பி.வி.எஸ்.சி., பி.எப்.எஸ்.சி., ஆசிரியர் பயிற்சி, பட்டய மற்றும் பட்ட மேற்படிப்புகள் உட்பட பல்வேறு படிப்புகளில் தமிழ்நாடு அரசால் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சார்ந்தோர் சான்று பெற வேண்டும்.முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகு சான்று, அடையாள அட்டை, சார்ந்தோரின் பள்ளி இறுதி சான்று, மதிப்பெண் பட்டியல், ஜாதிச்சான்று, கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், ஓய்வூதியம், ஒப்பளிப்பு ஆணை மற்றும் முன்னாள் படைவீரர் விதவையர் விண்ணப்பம் ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து, சான்று பெறலாம். மேலும், சந்தேகங்களை முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் 04146 220524 தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story