மின் மோட்டார் காயில் கட்டும் பயிற்சி

X
கள்ளக்குறிச்சியில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் மின் மோட்டார் காயில் கட்டும் பயிற்சிக்கு நேர்காணல் நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் மின் மோட்டார் காயில் கட்டும் பயிற்சி, 30 நாட்களுக்கு நடக்கிறது. இதற்கான நேர்காணல் வரும் இன்று 26 மற்றும் நாளை 27ம் தேதிகளில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், 46 ஏ/டி, முத்தையா இல்லம், பெரியார் நகர், மாடூர் சுங்கச்சாவடி அருகில் கள்ளக்குறிச்சி எனும் முகவரியில் நடக்கிறது.பயிற்சி காலத்தில் மதிய உணவு, காலை மற்றும் மாலை நேரங்களில் தேநீரும், வங்கி கடன் பெறுவதற்கான ஆலோசனையும் வழங்கப்படும். 8ம் தேர்ச்சி பெற்ற, எழுத, படிக்க தெரிந்த 18 முதல் 45 வயதுடைய நபர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம். கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அதற்கான சான்றிதழ் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story

