அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி இளைஞர்கள்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரியமங்கலம் கெரகோட அள்ளியில் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் வேளாண்மை துறை அமைச்சரும் தற்போதைய பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கேபி அன்பழகன் அவரது இல்லத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பாலக்கோடு வழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பாலக்கோடு அதிமுக வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கணபதி ஊராட்சி பெல்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்த திமுகவினர் மற்றும் பல்வேறு மாற்றுக்கட்சியினை சேர்ந்தவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி சூர்யா விக்ரமன் ஆகியோர் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் பாலக்கோடு எம்எல்ஏ கேபி அன்பழகன் தலைமையில் முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். இதில் கட்சியில் இணைந்தவர்களுக்கு அதிமுக கட்சி துண்டு அணிவித்து முன்னாள் அமைச்சர் வரவேற்றார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் முன்னாள் கவுன்சிலர் சித்துராஜ் , முன்னாள் ஊராட்சி செயலாளர் ராமு மற்றும் நிர்வாகிகள் கண்ணன் ஜனார்த்தனன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story