கோவை: கனமழை- அமைச்சர் முத்துசாமி செய்தியாளர் சந்திப்பு !

X
கோவை மாவட்டத்தில் மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநகராட்சி நிர்வாகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், கண்காணிப்பு அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, பாதிப்பு ஏற்படும் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இதுவரை பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாவிட்டாலும், சில இடங்களில் கனமழை காரணமாக ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. எனினும், அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. லேசான காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் பாதிப்புகளை உடனடியாக சீர் செய்ய 16 ஜேசிபி இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக் குழுவினர் மேட்டுப்பாளையத்திலும், வால்பாறையிலும் தயார் நிலையில் உள்ளனர். மழைநீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன என கூறினார்.
Next Story

