நாய் கடிக்கு ஊசி போடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

X
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாய் கடிக்கு ஊசி போட வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க வண்ணம் உள்ளது. இங்கு தினசரி சுமார் 50க்கும் மேற்பட்டோர் புதிதாக நாய் கடித்து சிகிச்சை பெற வருகின்றனர். மேலும் தொடர் சிகிச்சைக்காக தினமும் 120க்கும் மேற்பட்டோர் நாய்கடி ஊசி போட வருகின்றனர். நகரில்நாய் தொல்லை அதிகரிப்பால் இந்த நிலை என கூறப்படுகிறது. இருப்பினும் நாய்கடி ஊசிக்கான மருந்து தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
Next Story

