கோவை: கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து !

கோவை: கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து !
X
அன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டதால் அதிவேகமாக சென்ற கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து.
நீலகிரி மாவட்டம் ஊட்டி எமரால்டு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (48) என்பவர், நேற்று காலை அவிநாசி நோக்கி தனது காரில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் உட்பட மூவருடன் மேட்டுப்பாளையம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். கார் அன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஈஸ்வரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாகச் சென்று சாலையோரத்தில் இருந்த ஒரு சிறு பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி சுமார் 10 அடிக்கும் மேல் தூக்கி வீசப்பட்டது. பின்னர், சாலையோரம் இருந்த சக்தி திரையரங்கின் சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த மூவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. மேலும், அதே சமயம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு முதியவரும் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினார். விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து செயல்பட்டு, காரில் இருந்த மூவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். இந்தச் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விபத்து நடந்ததற்கான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story