ஓசூர் அனுமதி இல்லாமல் மணல் அள்ளி சென்ற லாரி பறிமுதல்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாசில்தார் குணசிவா மற்றும் அதிகாரிகள் குமுதேப்பள்ளியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்ட போது அதில் மூன்று யூனிட் மணல் அனுமதி இன்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து குணசிவா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

